ஆதித்யா-எல்1: சுட்டெரிக்கும் சூரியனை நாசா 'தொட்டது' எப்படி? இஸ்ரோ என்ன செய்யப் போகிறது?
சூரியனைப் பற்றி ஆராய்வதற்காக ஆதித்யா-எல்1 திட்டத்தைச் செயல்படுத்த இஸ்ரோ தயாராகிவரும் நிலையில், இதுவரை சூரியனுக்கு இது போல் எத்தனை பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பது குறித்தும், அதனால் சூரியனைப் பற்றி மனித குலம் என்ன அறிந்திருக்கிறது என்பதையும் சுருக்கமாக நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.