சென்னையில் பாகிஸ்தானை வீழ்த்தி வரலாறு படைத்த ஆப்கானிஸ்தான் - ரசிகர்கள் ஆதரவு யாருக்கு அதிகம்?
சேப்பாக்கம் மைதானத்தில் பாகிஸ்தான் அணிக்கு ரசிகர்கள் இருந்ததைவிட ஆப்கானிஸ்தான் வீரர்களுக்குத்தான் ரசிகர்கள் அதிகமாக இருந்தனர். ஆப்கானிஸ்தான் தேசியக் கொடி ஆங்காங்கே தெரிந்தது, ஆப்கானிஸ்தான் ஜெர்ஸி அணிந்த நபர்களும் இருந்தனர். அதேநேரம், பாபர் ஆசம், ஹசன் அலி, ஹாரிஸ் ராஃப் ஆகியோருக்கும் சென்னை ரசிகர்கள் ஆதரவு அளித்தனர்.