தென் சீனக் கடலில் மோதிக் கொள்ளும் சீனா - பிலிப்பைன்ஸ்
தென் சீன கடல் பகுதியில் சீனா பிலிப்பைன்ஸ் கப்பல்கள் மோதி கொள்கின்றன. அந்த பகுதியில் யார் ஆதிக்கம் செலுத்துவது என்ற மோதல் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. அந்த கடல் பகுதியில் உள்ள பவளத்திட்டில் 1999ம் ஆண்டு பிலிப்பைன்ஸ் இரண்டாம் உலகப் போர் காலத்திய கப்பல் ஒன்றை நிலை நிறுத்தி தனது கட்டுப்பாட்டை வெளிப்படுத்துகிறது. இந்த கப்பல் தற்போது முழுவதும் சிதைவுறும் நிலையில் இந்த கடல் பகுதியில் மோதல்கள் தீவிரமடையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.