இஸ்ரேல்-ஹமாஸ் போருக்கு நடுவே மத்திய கிழக்கில் அமெரிக்கா முதல் தாக்குதல் - எங்கே?
கிழக்கு சிரியாவில் இரானின் பாதுகாப்பு படைகளில் ஒன்றான இரான் புரட்சிகரப் படையினரால் பயன்படுத்தப்பட்டு வந்த இரண்டு ஆயுதங்கள் மற்றும் வெடிமருத்து சேமிப்பு கிடங்குகளின் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல் நடத்தியது. இராக் மற்றும் சிரியாவில் உள்ள அமெரிக்கத் தளங்கள் மீது இரானின் சமீபத்திய தாக்குதல்களுக்கான பதிலடி இது என அமெரிக்க பாதுகாப்பு செயலர் லாயிட் ஆஸ்டின் தெரிவித்தார்.