காஸா மீது இஸ்ரேல் நடத்தும் மூன்று கட்ட தாக்குதல்கள் என்னென்ன?
காஸா போர் இரண்டாம் கட்டத்தை எட்டியுள்ளது எனவும் இந்தப் போர் நீண்ட நெடியதாக இருக்கும் எனவும் இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். இஸ்ரேல் காஸா மீதான தரைவழித் தாக்குதலை தொடங்கியுள்ள நிலையில் அவர் இதைத் தெரிவித்துள்ளார். காஸாவில் தொடர் குண்டு வீச்சுகள் நடைபெற்று வரும் நிலையில், தாக்குதல் தீவிரப்படுத்தப்படும் என்பது இஸ்ரேல் பிரதமரின் கூற்றிலிருந்து தெரிய வருகிறது.