முத்துராமலிங்க தேவரின் தங்க கவசம்: அ.தி.மு.க.வில் முடிவு கிடைக்காமல் தொடரும் சர்ச்சை
பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு அதிமுக சார்பில் வழங்கப்பட்ட 13 கிலோ எடை கொண்ட தங்க கவசத்தை வங்கியில் இருந்து பெறுவது யார் என ஓ.பி.எஸ், இ.பி.எஸ் தரப்பினர் ஒவ்வோர் ஆண்டும் உயர்நீதிமன்றத்தை நாடுகின்றனர். இந்தப் பிரச்னையில் இறுதி முடிவு எட்டப்படாதது ஏன்? அதை யார் எடுக்க வேண்டும்?