இஸ்ரேல் - ஹமாஸ் போருக்கு பின், இரானின் முக்கியத்துவம் இந்தியாவுக்கு அதிகரித்துள்ளதா?
இந்தியா இரான் ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு முக்கியமான சர்வதேச வடக்கு தெற்கு வர்த்தக பாதை திட்டத்தின் நடவடிக்கைகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதற்கு இஸ்ரேல்-ஹமாஸ் போர் காரணமாக அமைந்துள்ளது. இரான் அல்லாமல் செப்டம்பர் மாதம் டெல்லியில் திட்டமிடப்பட்ட வர்த்தக பாதை தற்போது சாத்தியமாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இது குறித்த விவரங்களை அலசுகிறது இந்த கட்டுரை.