அமெரிக்க அதிபரைக் கண்காணிக்கிறதா வட கொரியா? – கிம் ஜாங் உன் கூற்றில் எவ்வளவு உண்மை இருக்கிறது?
வட கொரியா வெள்ளை மாளிகை உள்ளிட்ட அமெரிக்க இலக்குகளை கண்காணிக்க உளவு செயற்கைகோள் கொண்டிருப்பதாக உலகுக்கு அறிவித்துள்ளது. இது மேற்கத்திய நாடுகளை அச்சுறுத்தவா அல்லது உண்மையிலேயே செயற்கைகோள் இருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது.