பிக் பாஸ் பட்டம் வென்றார் அர்ச்சனா - கமல் மீதே விமர்சனம் எழும் அளவுக்கு என்ன நடந்தது?
பிக் பாஸ் தமிழ் சீசன் 7 வெற்றியாளராக அர்ச்சனா தேர்வு செய்யப்பட்டுள்ளார். சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாத வகையில் நடந்து முடிந்துள்ள இந்த சீசனில் மற்ற எந்த சீசனிலும் இல்லாத வகையில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய கமல் மீதே விமர்சனங்கள் எழுந்தன. இந்த சீசனில் நடந்தது என்ன? அர்ச்சனா வெற்றியாளராக உருவெடுக்க என்ன செய்தார்?