சேப்பாக்கம் மைதானம் 16 ஆண்டுகளாக ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு கொடுங்கனவாக இருப்பது ஏன்?
தோனி எனும் மாபெரும் சக்தி சிஎஸ்கே அணியை 14 ஆண்டுகளாக வழிநடத்தியநிலையில் புதிய கேப்டனுடன் இந்த சீசனை எதிர்கொள்கிறது. தோனி களமிறங்குவாரா, ப்ளேயிங் லெவனில் இடம் பெறுவாரா, பேட் செய்வாரா என்பதை தெரிந்து கொள்ளவும், அவரின் ஹெலிகாப்டர் ஷாட்டைப் பார்க்கவும், மின்னல்வேக விக்கெட் கீப்பிங்கை ரசிக்கவும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.