'கமலுக்கு வில்லன் இவரா எனக் கேட்டனர். ஆனால்...' - டேனியல் பாலாஜியின் முழு பின்னணி
‘வேட்டையாடு விளையாடு’, ‘காக்க காக்க’ உள்ளிட்ட திரைப்படங்கள் மூலமாக அறியப்பட்ட பிரபல நடிகர் டேனியல் பாலாஜி வெள்ளிக்கிழமை (மார்ச் 29) இரவு மாரடைப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 48. அவருடைய கண்கள் தானம் செய்யப்பட்டுள்ளன.