மக்களவைத் தேர்தல்: தமிழகத்தில் காலை 9 மணிவரை 12.55% வாக்குப்பதிவு
இந்தியாவில் 18ஆவது மக்களவைத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப் பதிவு தொடங்கியது. இதில் தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியுள்ளது.