உடல் முழுவதும் பச்சைக் குத்திக்கொள்ள ஆர்வம் காட்டும் தாய்லாந்து பெண்கள்
யந்த்ரா பச்சைக் குத்துதல் எனும் முறை மூலம் பாதுகாப்பு, பலம், அதிர்ஷ்டத்தின் மந்திர சக்திகளை பெறலாம் என தாய்லாந்தில் நம்பப்படுகிறது. ஆனால் இந்த முழு உடல் யந்த்ரா பச்சைக் குத்துதல் முறை என்பது பெண்களுக்கு செய்யக் கூடாத ஒன்றாக முன்பு இருந்தது. இப்போது பல தாய்லாந்து பெண்கள் அதனை உடைக்க விரும்புகிறார்கள்.