நாடாளுமன்றத் தேர்தல் 2024: 13 மாநிலங்களில் 88 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு - முழு விவரம்
மக்களவைத் தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று (வெள்ளி, ஏப்ரல் 26-ஆம் தேதி) காலை 7 மணிக்குத் துவங்கியது.இரண்டாம் கட்டத்தில் 13 மாநிலங்களில் உள்ள 88 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ராகுல் காந்தி, ஹேமமாலினி, சசி தரூர் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் பல முக்கிய பிரமுகர்கள் இந்த இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில் போட்டியிடுகிறார்கள்.