நிலவில் கால் பதிக்க அமெரிக்கா - சீனா போட்டியில் உள்ளே நுழையும் இந்தியா - முந்தப் போவது யார்?
அரை நூற்றாண்டுக்கும் மேலான இடைவெளிக்குப் பிறகு, சந்திரனுக்கு மனிதர்களை அனுப்பும் ஆர்வம் மீண்டும் உருவாகியுள்ளது. இம்முறை அமெரிக்கர்கள் மட்டுமின்றி பிற நாட்டினர் மற்றும் பெண்கள் அடங்கிய விண்வெளி வீரர்களை நிலவுக்கு அனுப்பும் திட்டத்தை அமெரிக்கா செயல்படுத்த உள்ளது. அதே சமயம், சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளும் நிலவுக்கான புதிய பயணத் திட்டங்களை திட்டமிட்டு வருகின்றன. இதில் முந்தப் போவது யார்? 21ம் நூற்றாண்டில் நிலவில் முதலில் கால் பதிக்கப் போவது யார்?