எட்டே பாகங்கள்தான், பழுதானால் நீங்களே மாற்றிக் கொள்ளும் உலகின் முதல் மொபைல் போன்
நெதர்லாந்தைச் சேர்ந்த நிறுவனம், மக்களே எளிதில் சரிசெய்து கொள்ளக் கூடிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களை உருவாக்கியுள்ளது. வெறும் எட்டு பாகங்கள் மட்டுமே கொண்ட இந்த ஸ்மார்ட்போன் பழுதானால் அந்த குறிப்பிட்ட பாகத்தை நீக்கிவிட்டு புதிதாக ஒன்றை நீங்களே பொருத்திவிடலாம். இதனால் ஆண்டுக்கு ஒருமுறையோ அல்லது மொபைல் பழுதானாலோ நீங்கள் புதிய மொபைலுக்கு மாற வேண்டிய அவசியம் இருக்காது.