இந்து திருமண சடங்குகள்: உச்ச நீதிமன்ற தீர்ப்பால் சுயமரியாதைத் திருமணங்களுக்கு ஆபத்தா?
திருமண உறவு, விவாகரத்து குறித்த வழக்குகளில் இந்திய நீதிமன்றங்கள் வழங்கும் தீர்ப்புகளும் கருத்துகளும் சுவாரசியமாக இருக்கும் அதே சமயத்தில், சமூகத்தில் பெரும் விவாதங்களையும் அவை கிளப்பும். அப்படி விவாதத்தை எழுப்பியிருக்கிறது உச்ச நீதிமன்றம் சமீபத்தில் வழங்கியிருக்கும் தீர்ப்பு. இந்து திருமணங்கள் குறித்த வழக்கு ஒன்றில் உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு, சுமார் 56 ஆண்டுகளுக்கு முன்பு சுயமரியாதை திருமணங்களை சட்டபூர்வமாக்கிய தமிழ்நாடு உட்பட இந்தியா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.