News Search:
Narrowed By (Click to remove): > [Category] > [time]
- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

முள்ளம்பன்றி போலத் தோற்றமளிக்கும் எகிட்னா என்ற உயிரினம் 20 கோடி ஆண்டுகளுக்கு முன் தோன்றியதாகக் கருதப்படுகிறது. அது, உயிரோடு இருந்ததற்கான ஆதாரமாக இதுவரை இருந்தது, நெதர்லாந்து அருங்காட்சியகத்தில் சேகரித்து வைக்கப்பட்டுள்ள எகிட்னாவின் உடல் எச்சம் மட்டுமே. ஆனால், இப்போது அது இன்னும் வாழ்வது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

உத்தரபிரதேசத்தின் அலிகர் நகரில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் ஆதரவுடன் உள்ள நகராட்சி வாரியம் அமைப்பு, அந்நகரின் பெயரை ‘ஹரிகர்’ என மாற்றும் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்திருக்கிறது. இது 2024-ஆம் ஆண்டின் பொதுத் தேர்தலுக்கு முன் மதப் பிரச்னையைத் தூண்டுவதற்கான சதி என்ற விமர்சனஙக்ளும் எழுந்துள்ளன.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

செயற்கை நுண்ணறிவின் யுகமான இந்தக் காலகட்டத்தில் செயற்கை மழை ஒன்றும் புதிய சொல்லல்ல. வெள்ளம், வறட்சி, அதிக வெப்பம், புயல், காட்டுத்தீ போன்ற காலங்களில் அவற்றைக் கட்டுப்படுத்த ஒரு தீர்வாக விவாதிக்கப்பட்டதுதான் இந்த செயற்கை மழை.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

தீபாவளியன்று வேலைக்குச் செல்வது பலருக்கும் நினைத்துக்கூடப் பார்க்க முடியாத ஒன்று. ஆனால், இந்தப் பண்டிகை நாளன்றும் பொதுமக்களுக்கான அத்தியாவசியத் தேவைகளும் சேவைகளும் தடைபடாமல் கிடைக்க, பலர் தங்கள் கொண்டாட்டங்களைத் தியாகம் செய்கிறார்கள். இது அவர்களின் கதை.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

சோவியத்தின் மிக்-21 போர் விமானங்களைப் பெறுவது மேற்குலக நாடுகளுக்கு ஒரு கனவாகவே இருந்த நிலையில் இஸ்ரேலின் உளவு நிறுவனமான மொசாத் அதனை வெற்றிகரமாக திருடி வந்தது. அது எப்படி? பலத்த கட்டுக்காவலுக்கு மத்தியில் மோசாத் எப்படி அதனை சாதித்தது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

உலகக்கோப்பையில் இருந்து பாகிஸ்தானை வெளியேற்றி இங்கிலாந்து ஆறுதல் வெற்றி பெற்றுள்ளது. இதனால், அரையிறுதியில் இந்தியாவுடன் மோதும் வாய்ப்பை நியூசிலாந்து பெற்றுள்ளது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சமீபத்தில் அமெரிக்க ராணுவ உபகரணங்களை வாங்குவதற்காக தைவான் அரசுக்கு 80 மில்லியன் டாலர்கள் நிதியுதவி வழங்கியுள்ளார். இவ்வாறு தைவான் ராணுவத்தை பலப்படுத்த அமெரிக்கா தனது சொந்தப் பணத்தையே வழங்குவது ஏன்? அதனை சீனா எதிர்ப்பது ஏன்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ஒவ்வோர் ஆண்டும் தீபாவளி நேரத்தில் வெங்காயம் விலை உயர்வது வாடிக்கையாகிவிட்டது. இது செயற்கையானதா? அதனைக் கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசால் ஒன்றும் செய்ய முடியாதா?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

தீபாவளியின் பின்னணியில் இருக்கும் கதைகள் ஏராளம். அது இந்துப் பண்டிகையா? பௌத்தம், சமணத்தில் இருந்து வந்ததா? தமிழ்நாட்டில் எப்போதிலிருந்து தீபாவளி கொண்டாடப்படுகிறது? அதன் வரலாறு என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

தீபாவளியை முன்னிட்டு சில வீடுகளில் தயாரிக்கப்படும் தீபாவளி லேகியத்தை தமிழ்நாடு அரசே தயாரித்து சந்தைப்படுத்த முனைந்திருக்கிறது. அதில் அப்படி என்ன இருக்கிறது? தமிழ்நாடு அரசின் முயற்சியை சிலர் எதிர்ப்பது ஏன்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

காஸாவில் பெண்கள், குழந்தைகளைக் கொல்வதை இஸ்ரேல் நிறுத்த வேண்டும் என்று பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் பிபிசியிடம் அளித்த பிரத்யேக நேர்காணலில் கூறியுள்ளார்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ஸ்ரீலங்கா கிரிக்கெட் வாரியத்திற்கு ஐசிசி தடை விதித்தமையானது, தற்போது சர்வதேச மட்டத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. இலங்கை கிரிக்கெட்டின் எதிர்காலம் என்ன ஆகும்? அடுத்து என்ன நடக்கும்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

புதிதாக பரிசோதனை செய்யப்பட்டுள்ள ஒரு ஊசி மருந்து ஆண்களுக்கான சிறந்த கருத்தடை மருந்தாக இருக்கும் என கருதப்படுகிறது. இந்த மருந்து எதிர்காலத்தில் பெண்கள் மீதான சுமையைக் குறைக்குமா என்பதற்கு காலம் தான் பதில் சொல்லவேண்டும் என நிபுணர்கள் கருதுகின்றனர்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

சுதந்திர இந்தியாவின் கல்விக் கட்டமைப்பை வலுப்படுத்தியதில் முக்கியப் பங்கு, நாட்டின் முதல் கல்வி அமைச்சரான மௌலானா அபுல்கலாம் ஆசாதையே சேரும். அவருடைய சாதனைகள் என்னென்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

உலகின் பல்வேறு பகுதிகளிலும் கலாசாரம் மற்றும் மதங்கள் சார்ந்து வேறுபாடுகள் இருந்தாலும், ஆண்கள் குறித்த சிந்தனைகள் கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ ஒரே மாதிரியானதாகவே இருக்கிறது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

சத்ரபதி சிவாஜியின் வரலாற்றை தேர்தல் ஆதாயத்துக்காக பாஜக பயன்படுத்துவதாக குற்றம்சாட்டப்படுகிறது. இதன் பின்னணி என்ன? இது பாஜகவுக்கு எப்படி பலன் அளிக்கும்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் உறுப்புரிமையை தடை செய்த சர்வதேச கிரிக்கெட் வாரியம். உடன் அமலுக்கு வரும் வகையில் இந்த முடிவு திடீரென எடுக்கப்பட்டது ஏன்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ஆப்கானிஸ்தானிற்கு எதிரான உலகக்கோப்பை போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது. வெற்றியோடு இந்த உலகக்கோப்பையை நிறைவு செய்ய போராடியது ஆப்கானிஸ்தான்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

அரிய நோய்களில் ஒன்றான தலசீமியா என்பது ஒருவகை சிவப்பணுக்கள் குறைபாடு. இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தொடர்ந்து உடலில் ரத்தம் ஏற்ற வேண்டியிருக்கும். உறவுகளுக்குள் திருமணம் செய்துகொள்வது தலசீமியா ஏற்பட காரணம் என்று கூறப்படுகிறது. மலைவாழ் மக்களிடையே இந்த பழக்கம் தொடர்வதால் திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களின் பழங்குடி மக்களிடையே இது அதிகம் காணப்படுகிறது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா, நிமிஷா சஜயன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' ரசிகர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்துள்ளதா? இந்த திரைப்படம் எப்படி இருக்கிறது? ஜிகர்தண்டாவை போலவே ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படமும் வெற்றி பெறுமா?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

தீபாவளியை முன்னிட்டு ராஜு முருகன் இயக்கத்தில் கார்த்தி, அனு இம்மானுவேல் நடித்திருக்கும் `ஜப்பான்` திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. ராஜுமுருகனின் முதல் முழுநீல கமெர்ஷியல் படமும் நடிகர் கார்த்தியின் 25வது படமுமான ஜப்பான் ரசிகர்களை கவர்ந்திருக்கிறதா என்பதை பார்க்கலாம்...

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் சீசன் 7 தொடங்கியதிலிருந்தே சர்ச்சைகளுக்கும் விமர்சனங்களுக்கும் பஞ்சமில்லை. இந்த நிகழ்ச்சியை குழந்தைகள் பார்ப்பது ஏன் ஆபத்தானது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

தங்கத்தில் முதலீடு என்றால் முன்பெல்லாம் தங்க நகைகள் மட்டுமே இருந்தன, தங்கக்கட்டிகளும் இருந்தன. ஆனால் மாறி வரும் டிஜிட்டல் உலகில் தங்கத்தை கையில் பார்க்காமலே, தங்கத்தை வாங்கவும் விற்கவும் முடியும். தங்கத்தை எந்தெந்த வகைகளில் வாங்கலாம்., யாருக்கு எந்த முறை லாபகரமாக இருக்கும் என விளக்குகிறது இந்த கட்டுரை.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

பல நூற்றாண்டுகளாக மத்திய கிழக்கில் பெரும் பகுதியில் ஆட்சி செலுத்திவந்த ஒட்டோமான் பேரரசு பின்னர் படிப்படியாக வீழ்ச்சியைச் சந்தித்தது. நவீன வரலாற்றில் ஒட்டோமான் பேரரசு மறைந்து, துருக்கி என்ற நாடு உருவாகி 100 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

கன்னியாகுமரியை சேர்ந்த 83 வயது வெங்கடேசன், மூத்தோருக்கான தடகள போட்டிகளில் இந்தியா சார்பாக போட்டியிட்டு தங்கப் பதக்கங்களை வென்று வருகிறார். 38 ஆண்டுகள் ரயில்வே துறையில் பணியாற்றி 2001ம் ஆண்டு ஓய்வுபெற்ற பிறகு தான் ஓட வேண்டும் என்ற ஆசை தொற்றிக் கொண்டது. அதன் பிறகு போட்டிகளில் ஓட ஆரம்பித்த அவர், மாநில அளவில் 23 தங்க பதக்கங்களையும் தேசிய அளவில் 32 தங்கப் பதக்கங்களையும் வென்றுள்ளார்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் விளையாட உள்ளது. எனவே, முதலில் பாகிஸ்தான் இந்த போட்டியில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற நிலை உள்ளது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ஆணுக்கோ பெண்ணுக்கோ செய்யப்படும் கருத்தடை அறுவை சிகிச்சை என்பது நிரந்தர கருத்தடை சிகிச்சையாகும். 110 கோடிக்கும் மேலான மக்கள் தொகை கொண்டுள்ள இந்தியாவில் கருத்தடை சிகிச்சை அரசால் ஊக்குவிக்கப்படுகிறது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

கடந்த 2020இல் மட்டும் இந்தியாவில் 2 கோடிக்கும் அதிகமான பழைய மொபைல்கள் விற்கப்பட்டதாக இந்திய செல்லுலார் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் சங்கத்தின் சமீபத்திய தரவு தெரிவிக்கிறது. இப்படி பழைய ஸ்மார்ட்ஃபோன்களை விற்பதால், உங்கள் தரவுகளை யார் வேண்டுமானால் எடுக்க முடியும். அதைத் தடுப்பது எப்படி?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

பாகிஸ்தானை தலைசுற்ற வைக்கும் அரையிறுதி இலக்கு. இந்தியாவுடன் அரையிறுதியில் மோத நியூசிலாந்து தயாராகிவிட்டதா? வான்கடே மைதானத்தில் என்ன நடக்கப் போகிறது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

‘ஜிகர்தண்டா’ படத்தின் தொடர்ச்சியாக உருவாகும் இந்தப் படத்தின் கதை, முந்தைய படத்தோடு இருக்கும் தொடர்பு, கதை நடக்கும் காலகட்டம், எஸ்.ஜே. சூர்யா, ராகவா லாரன்ஸ் நடிப்பு ஆகியவை குறித்தெல்லாம் பிபிசியிடம் பேசியுள்ளார் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்.

Local News

Local News

Sri Lanka News

@2022 - All Right Reserved. Designed and Developed by Rev-Creations, Inc