News Search:
Narrowed By (Click to remove): > [Category] > [time]
- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

கொரியா மக்களைப் போன்ற பளபளக்கும் கண்ணாடி போன்ற சருமம் வேண்டும் என்பதற்காக கொரியாவின் அழகு சாதன பொருட்களைப் பலரும் பயன்படுத்த தொடங்கியுள்ளனர். ஆனால், இது இந்திய பெண்களுக்கு உண்மையில் பலன் அளிக்குமா?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் ஒருநாள் சர்வதேச போட்டிகளுக்கான, ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் 1983இல் இங்கிலாந்தில் நடைபெற்றது. இறுதிப் போட்டியில், அப்போது வலிமையான அணியாக திகழ்ந்த மேற்கிந்திய தீவுகளை வீழ்த்தி கோப்பையைக் கைப்பற்றியது இந்திய அணி.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் வாழ்விடம் பாதிப்பால் காட்டை விட்டு வெளியேறிய 128 யானைகள் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட மின் வேலியில் சிக்குவது, ரயிலில் அடிபடுவது எனப் பல செயற்கை காரணங்களால் இறந்துள்ளன. அதேபோல, யானை – மனித எதிர்கொள்ளலால், 466 மனிதர்கள் இறந்துள்ளதாக தமிழ்நாடு வனத்துறையினர் தெரிவிக்கின்றனர்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

கொசுக்களால் ஏற்படும் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் தமிழ்நாட்டில் கடந்த 9 மாதங்களில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாடு சுகாதாரத்துறையின் அறிக்கைப்படி 300 பேர் தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். டெங்கு காய்ச்சல் பாதிப்பில் இருந்து குழந்தைகளைப் பாதுகாப்பது எப்படி?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ஜம்மு -காஷ்மீர் மாநிலம், அனந்த்நாக்கில் சில தினங்களுக்கு முன் தீவிரவாத தாக்குதல் நடைபெற்றது. இந்த தாக்குதலுக்கு டிஆர்எஃப் எனும் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்த அமைப்பின் பின்னணி என்ன, வளர்ந்தது எப்படி?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இந்த அறிக்கையில் யுஏபி எனப்படும் அடையாளம் காணப்படாத அசாதாரண நிகழ்வுகளை எப்படி மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்தைக் கொண்டும், செயற்கை நுண்ணறிவைக் கொண்டும் நாசா ஆய்வுக்கு உட்படுத்துகிறது என விவரிக்கப்பட்டுள்ளது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இந்தத் திட்டத்திற்காக தமிழ்நாடு அரசின் இந்த ஆண்டு நிதி நிலை அறிக்கையில் சுமார் 7 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. வரும் ஆண்டுகளில் சுமார் 12 கோடி ரூபாய் அளவுக்கு இந்தத் திட்டத்திற்காக ஒதுக்கீடு செய்ய வேண்டியிருக்கும்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியாகி இருக்கிறது மார்க் ஆண்டனி திரைப்படம். விஷால், எஸ்.ஜே.சூர்யா கூட்டணியில் உருவாகி இருக்கும் சினிமா எப்படி உள்ளது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

யுபிஐ நிச்சயம் நல்ல முன்னெடுப்புதான். தற்போது சாலையோர கடைகள் மூலம் பெரிய பெரிய மால்கள் வரையில் எங்கும் யுபிஐ மூலம் நாம் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியும். அதே நேரத்தில் யுபிஐ நாம் அதிகம் சார்ந்து இருக்கிறோமா? யுபிஐ காரணமாக நேரடியாக பணத்தை கொடுத்து பரிவர்த்தனை செய்வதை தவிர்க்கிறோமா? யுபிஐ காரணமாக வீண் செலவு செய்கிறோமா?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

டேனியல் புயலால் தாக்கப்பட்ட லிபியாவில் பல ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். இரண்டு அணைகள் உடைந்ததால் லிபியாவின் கிழக்குப் பகுதியில் உள்ள டெர்னா என்ற நகரத்தில் குடியிருப்புகள் பல முழுவதுமாக வெள்ளத்தில் மூழ்கின.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

விராட் கோலி, ரோஹித் சர்மா, சுப்மன் கில் என மூத்த வீரர்கள் அனைவரையும் அடுத்தடுத்து வெளியேற்றியபோது இவரைக் கண்டு இந்தியா முழுவதும் போட்டியை நேரலையில் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயிருந்தனர். அவர் துனித் வெல்லாலகே.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இந்தியாவில் அழிந்துவரும் கால்நடை பட்டியலில் தோடர் இன எருமை சேர்க்கப்பட்டுள்ளது. இதை தங்களது இனத்தின் அழிவுக்கான ஆரம்பமாக கருதுகின்றனர் தோடர் இனமக்கள். தமிழகத்தின் அரிய வகை எருமை இனம் அழிந்து வருவதற்கு என்ன காரணம்? இந்த இனத்தை அழிவில் இருந்து காக்க மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ரூ.2.5 லட்சத்திற்கும் மேல் ஆண்டு வருமானம் ஈட்டும் குடும்ப உறுப்பினர்கள் இருந்தால் அந்தக் குடும்பத்தில் பெண்களுக்கு உரிமைத் தொகை கிடையாது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்திக்கு தயாரிக்கப்படும் சிலைகளில், ரசாயனம் கலந்த சிலைகளை தயாரிக்கக்கூடாது என தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் தடைவிதித்தாலும், அந்த தடை மீறப்படுவதாக சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். அதோடு, ரசாயன சிலை தயாரிப்பவர்கள், கரைப்பவர்கள் மீது நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என்றும் குற்றம்சாட்டுகின்றனர்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

பார்ன் பூட் ஏரியைப் போல சதுப்பு நிலத்தோடு அமைந்த பல நீராதாரங்கள் நீலகிரி மலையில் வயில்வெளியாகவும், கேளிக்கை விடுதிகளாகவும் மாறிவருவருவதாக கூறும் சுற்றுச்சூழல் நிபுணர்கள்,மலையின் நிலஅமைப்பில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் பழங்குடி மக்களின் வாழ்வாதாரத்தை மாற்றியமைத்ததுடன், காலநிலை மாற்றங்களை ஒத்த பாதிப்புகளையும் ஏற்படுத்திவருவதாக வருத்தம் தெரிவிக்கின்றனர்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

பொருளாதார வழித்தடம் அமைக்கப்பட்டால், இந்தியாவில் இருந்து ஐரோப்பாவிற்கு சரக்குகளை கொண்டு செல்வதில் சுமார் 40 சதவீதம் நேரம் மிச்சமாகும் என்றும், போக்குவரத்துக்கான செலவும் குறையும் என்றும் கூறப்பட்டுள்ளது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

காங்கிரஸ் அல்லாத கட்சி ஒன்றின் சார்பில் இந்தியாவில் முதலமைச்சரான இரண்டாவது தலைவர் அண்ணா. தமிழ்நாட்டில் இடையறாமல் நடந்துவரும் 53 ஆண்டுகால திராவிடக் கட்சிகளின் ஆட்சிக்கு அதன் மூலம் அடித்தளம் இட்டவர். நவீன தமிழின் மீது, மக்கள் புழங்கும் தமிழின் மீது அண்ணா செலுத்தியிருக்கும் தாக்கம் அளப்பரியது. பெரிதாக ஆவணமாக்கப்படாதது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையின்போது தன் உயிரை தியாகம் செய்துள்ளது இந்திய ராணுவத்தின் நாய்கள் படைப்பிரிவைச் சேர்ந்த கென்ட் எனும் நாய். இதுபோல பல்வேறு ராணுவ நடவடிக்கைகளின்போது நாய்கள் தீவிரவாதிகளின் குண்டுகளுக்கு இரையாகின்றன.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இந்தியா 1947 ஆம் ஆண்டில் சுதந்திரம் பெற்றது. ஆனால், முதல் பொதுத்தேர்தல் 1952 ஆம் ஆண்டு நடந்தது. ஒட்டுமொத்த உலகத்தின் பார்வையும் இந்த தேர்தலின் மீதே இருந்தது. சமீபத்தில் சுதந்திரம் பெற்ற மிகப்பெரிய ஜனநாயக நாட்டில் எப்படி தேர்தல் நடத்தப்போகிறார்கள், அது வெற்றிகரமாக அமையுமா என அனைவரின் மனதில் பல கேள்விகள் எழுந்தன.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ஒரு நகரமே அழிந்து கிடக்கிறது. எங்கு பார்த்தாலும் இடிபாடுகள். வீதிகளில் சேறும் சகதியும் நிரம்பி வழிகிறது. மருத்துவமனைகளில் சடலங்கள் நிரம்பி வழிகின்றன. அங்குள்ள மக்களின் முகங்களில் கவலை தோய்ந்துள்ளது. இந்தத் துயரங்களுக்கு என்ன காரணம்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

தமிழக அரசின் ரூ.1000 உரிமைத் தொகை பயனாளிகளின் வங்கிக்க ணக்கில் செலுத்தும் பணி தொடங்கி உள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் தங்களுக்கு பணம் கிடைக்கப்பெறாத விண்ணப்பதார்கள் பணத்தை பெற என்ன செய்ய வேண்டும்? என்னென்ன காரணங்களுக்காக விண்ணப்பம நிராகரிக்கப்படும்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

அமெரிக்காவில் ரோந்து கார் மோதி உயிரிழந்த இந்திய பெண் பற்றி அந்நாட்டு போலீஸ் அதிகாரி ஒருவர் கேலியாகப் பேசியது பற்றி விசாரணை நடைபெற்று வருகிறது. உடலில் பொருத்தப்பட்ட கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடக்கிறது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

அமெரிக்க முன்னாள் அதிபர் கென்னடி கொலை செய்யப்பட்டது தொடர்பாக இதுவரை தீர்க்கப்படாத சந்தேகம் பல உள்ள நிலையில், கொலை நடந்த போது கென்னடிக்கு மிக அருகில் இருந்த லாண்டிஸ் என்பவர் தப்போது புதிய புயலைக் கிளப்பியுள்ளார். அவர் தெரிவிக்கும் தகவல் கென்னடி கொலை தொடர்பான விவாதங்களில் என்ன மாற்றத்தைக் கொண்டுவரும் என்ற கேள்வி இப்போது எழுந்திருக்கிறது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

2024ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர் செல்பவர்கள் இப்போதே தங்கல் ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம். ரயில்களில் 120 நாட்கள் முன்பு, டிக்கெட்களை முன்பதிவு செய்து கொள்ளலாம் என்பதால், இப்போதே முன்பதிவுகள் தொடங்கிவிட்டன. எப்படி செய்வது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

டாக்டர் அம்பேத்கர், திருவள்ளுவர், பட்டியலினத்தினர் குறித்து அவமதிக்கும் வகையிலும் அவதூறாகவும் பேசிய விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் முன்னாள் மாநிலத் தலைவரான ஆர்.பி.வி.எஸ். மணியன் சென்னை நகர காவல்துறையால் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் முன்னாள் மாநில துணைத் தலைவரும், விவேக பாரதி என்ற அமைப்பின் நிறுவனருமான ஆர்.பி.வி.எஸ். மணியன், கடந்த திங்கள் கிழமை 'பாரதியும் விவேகானந்தரும்'...

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

நம் உடலில் கோடிக்கணக்கான பாக்டீரியாக்கள் உள்ளன. அவை இல்லாமல் நம்மால் வாழ முடியாது. அவற்றில் அதிக எண்ணிக்கையினவை நமது குடலில் இருக்கின்றன. நமது குடலில் காணப்படும் பாக்டீரியாக்கள் நமது ஆரோக்கியத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அப்படியிருக்கையில், நாம் உட்கொள்ளும் ஆன்டிபயாடிக்குகளால் நமது குடலில் என்ன பாதிப்புகள் ஏற்படும்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ஜி20 நாடுகளின் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள டெல்லி வந்த பல தலைவர்கள் மகாத்மா காந்திக்கு அஞ்சலி செலுத்துவதற்காக ஞாயிற்றுக்கிழமை ராஜ்காட் சென்றனர். இருப்பினும் செளதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் ராஜ்காட் செல்லவில்லை. செளதி இளவரசர் ராஜ்காட் செல்லாததற்கு ஏதேனும் சிறப்புக் காரணம் உள்ளதா என்பதை பலரும் அறிய விரும்புகிறார்கள்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

அந்த சிறுமிக்கு 15 வயதுதான் இருக்கும். எந்நேரமும் மொபைலை கையில் வைத்துக்கொண்டே இருப்பதாக மனநல மருத்துவரிடம் பெற்றோர் வேதனையுடன் கூறினர். அந்தச் சிறுமி ஆபாசப் படம் பார்ப்பதாக மருத்துவர் கண்டுபிடித்தார்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

உலகின் இளம் வயது மலையேற்ற வீராங்கனைகளில் ஒருவராகவும் மௌண்ட் எல்ப்ரூஸை அடைந்த மிகவும் இளம்வயது வீராங்கனை என்ற பெருமையையும் சான்வி பெற்றுள்ளார்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ஏ.ஆர். ரஹ்மானின் நிகழ்ச்சிக்கு ஜனத்திரள் கூடும் என ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டிருந்தபோதும், இந்த நிகழ்வில் பொதுமக்களின் வாகனங்கள், முதல்வர் மு.க.ஸ்டாலின் வாகனம் உள்பட பல வாகனங்கள் சிக்கிக்கொண்டது அதிகமாக விமர்சிக்கப்பட்டுள்ளது.

Local News

Local News

Sri Lanka News

@2022 - All Right Reserved. Designed and Developed by Rev-Creations, Inc