News Search:
Narrowed By (Click to remove): > [Category] > [time]
- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

டைட்டானிக் கப்பலைப் பார்க்கப்போன டைட்டான் நீர்மூழ்கியில் இருந்த அனைவரும் இறந்துவிட்டனர் என்று பயண நிறுவனம் தெரிவித்துள்ளது. அமெரிக்க கடலோரப் படையும் இதை உறுதி செய்துள்ளது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

தமிழ்நாடு சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கை விவகாரத்தில் சபாநாயகர் பிடிவாதமாக இருக்க, அவைக்கு வெளியில் கோஷமெழுப்பி எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர் அ.தி.மு.கவினர். நீண்ட காலமாகத் தொடரும் இந்தப் பிரச்னையின் பின்னணி என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

காசாவில் தீவிரமடையும் இஸ்ரேல் விமானப்படை தாக்குதல்களால் உணவு, குடிநீர், மின்சாரம் இல்லாமல் அங்குள்ள மக்கள் மோசமான நெருக்கடியை சந்தித்துளளனர். கண்டு முன்னே வீடுகள் தரைமட்டமாவதைக் கண்ட மக்கள், காசாவில் பாதுகாப்பான இடம் என்று எதுவுமே இல்லை என்று கூறுகின்றனர். இஸ்ரேல் தாக்குதலை நிறுத்துமா என்று அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

தென் பசிபிக் பெருங்கடலில் உள்ள ஒரு குறிப்பிட்ட பகுதி விண்கலங்களின் சவக்கிடங்கு என்று அழைக்கப்படுகிறது. அதற்கு என்ன காரணம்? அங்கே என்ன இருக்கிறது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

பிரபஞ்ச அழகிப் போட்டியில் பங்கேற்ற பாகிஸ்தான் பெண்ணுக்கு ஆதரவும், எதிர்ப்பும் எழுந்துள்ளன. அவர் இது போன்ற போட்டியில் பங்கேற்றது வெட்கக் கேடானது என ஜமாத்-இ-இஸ்லாமி கட்சியின் செனட்டர் முஷ்டாக் அகமது விமர்சித்துள்ளார்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

சமூக தடைகளை மீறி தன்பால் ஈர்ப்பு காதலர்களான டிம்பிள் (27) மற்றும் மனிஷா (21) திருமணம் செய்துள்ளனர். இதில் சிறப்பு என்னவென்றால், அவர்கள் இருவரும் தங்கள் குடும்பத்தினரின் சம்மதத்துடன் இந்தத் திருமணத்தைச் செய்துள்ளனர்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்காவில் செயல்படும் கடன் செயலிகளால் மிரட்டப்பட்டு பணத்தை பறிகொடுத்த 60 க்கும் மேற்பட்ட இந்தியர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலைத் தொடர்ந்து உலக அளவில் பெட்ரோலியப் பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. எண்ணெய் உற்பத்தி செய்யும் பிற நாடுகளுக்கும் தாக்குதல் பரவும் என்ற அச்சம் தான் இது போன்ற விலை அதிகரிப்புக்குக் காரணமாக அமைந்துள்ளது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

பாகிஸ்தான் – இலங்கைக்கு இடையே நேற்று நடந்த ஆட்டத்தில், பாகிஸ்தானின் நம்பிக்கை நட்சத்திரம் முகமது ரிஸ்வான் மற்றும் அவ்வணியின் அறிமுக வீரர் அப்துல்லா ஷஃபீக் ஆகியோரின் அபாரமான ஆட்டத்தால் பாகிஸ்தான் அணி 345 ரன்களை சேஸிங் செய்து இலங்கை அணியை வீழ்த்தியது. இலங்கை சறுக்கியது எங்கே?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

பாட்டியாலா மாவட்டத்தில் உள்ள ரெசல் கிராமத்தைச் சேர்ந்த லவ்லீன் கவுர் சமீபத்தில் சப்-இன்ஸ்பெக்டராக சேர்ந்தார், ஆனால் அவரது தந்தை சம்கவுர் சிங், கான்ஸ்டபிளாக இருந்து சப்-இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு பெற 27 ஆண்டுகளானது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

குறிப்பிட்ட அளவுக்கு மேல் மருத்துவ இடங்களைக் கொண்டிருக்கும் மாநிலங்களில் புதிதாக மருத்துவக் கல்லூரிகளைத் திறக்க அனுமதி கிடையாது என தேசிய மருத்துவ ஆணையம் சமீபத்தில் அறிவித்துள்ளது. இது தமிழ்நாட்டை எப்படி பாதிக்கும்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இஸ்ரேல் மீது ஹமாஸ் மீண்டும் உக்கிர தாக்குதலை தொடங்கியுள்ளது. நான்காவது நாளாக நீடிக்கும் சண்டையில் இருதரப்பிலுமே நிமிடத்திற்கு நிமிடம் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இந்த சண்டையில் பணயக் கைதிகள் என்ன ஆனார்கள்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இஸ்ரேல், பாலத்தீனம், சிரியா ஆகியவற்றின் எல்லையில் பதற்றத்தை எப்போதுமே உயிர்ப்புடன் வைத்திருக்கிறது ஒரு பென்சில் கோடு. அது என்ன? அது எப்போது வரையப்பட்டது? அதனால் என்ன பிரச்னை?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

வீடியோ கேம் விளையாட்டுக்கு அடிமையான பதின்பருவ மாணவர் ஒருவர், தொடர்ச்சியாக 4 நாட்கள் உணவு, உறக்கம் இன்றி அதனை ஆடியுள்ளார். இதனால் அவர் என்ன ஆனார்? அவர் தற்போது எங்கே, எப்படி இருக்கிறார்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

தி.மு.க. எம்.பி. எஸ். ஜெகத்ரட்சகன் தொடர்புடைய இடங்களில் நடத்தப்பட்ட வருமான வரி சோதனைகளில் ரொக்கமும் ஆவணங்களும் கைப்பற்றப்பட்டதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன. இந்த ஜெகத்ரட்சகன் யார்? அவரது பின்னணி என்ன? ஐ.டி. ரெய்டு நடத்தப்பட்டது ஏன்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கையின் சுற்றாடல்துறை அமைச்சருமான ஹாபிஸ் நசீர் அஹமட் நாடாளுமன்ற உறுப்புரிமை பறிபோயுள்ளது. அவரது எம்.பி. பதவி பறிக்கப்பட்டது ஏன்? என்ன நடந்தது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

பாலஸ்தீன ஹமாஸ் குழுவினர் இஸ்ரேலுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியுள்ளனர். இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனர்களுக்கும் இடையிலான இந்த மோதல் உலகத்தை பிளவுபடுத்தியுள்ளது போல காணப்படுகிறது. இந்தியாவிலும் இதுதொடர்பாக மத ரீதியான பிளவு ஏன்? அதில் பா.ஜ.க. பங்கு என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

பெண்களாக, மூத்த குடிமக்களாக இருந்தால் அஞ்சலக சேமிப்புத் திட்டங்கள் உங்களுக்கு மிகவும் பயன் தரக் கூடியவை.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

தேனி மாவட்டத்தில், தனியார் நிதி நிறுவனத்திடமிருந்து கடன் வாங்கிய நபர் ஒருவர் அதைத் திரும்ப செலுத்தாததாகக் கூறி அவரது வீட்டின் சுவரில் அந்த நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் எழுதியது சமீபத்தில் சர்ச்சைக்குள்ளானது. இது தனி நபர் பகை காரணமாக நடந்த சம்பவம் என அந்நிறுவனம் கூறியுள்ளது. என்ன நடந்தது இச்சம்பவத்தில்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

அரியலூர் மாவட்டத்தில் நேற்று நடந்த பட்டாசு வெடிவிபத்தில் 11 பேர் உயிரிழந்திருக்கின்றனர். 16 பேர் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவத்தைத் தொடர்ந்து பட்டாசுக்கடை உரிமையாளரும், பட்டாசு ஆலை உரிமம் உள்ள அவரது உறவினர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். என்ன நடந்தது இவ்விபத்தில்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ஹமாஸ் ஆயுதக் குழு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி சுமார் 100 மக்களைப் பணயக் கைதிகளாகக் கொண்டு சென்றிருக்கும் நிலையில், அவர்களில் தங்கள் அன்புக்குரியவர்களும் இருக்கலாம் என்பதை அறிந்து குடும்பங்கள் பெரும் பீதி அடைந்திருக்கின்றனர். அவர்களின் சில கதைகள் இங்கே.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

பகுதி நேர வேலை 'ரிவ்யூ' செய்தால் மட்டும் போதும் கைநிறைய வருமானம் என பேராசையை தூண்டிய சைபர் க்ரைம் குற்றவாளிகளின் மோசடி வலையில் சிக்கி, கோவையில் பெண் ஒருவர் 15 லட்சம் ரூபாய் இழந்துள்ளார்.இது போன்ற சைபர் க்ரைம் மோசடிகளில் இருந்து தப்பிப்பது எப்படி? பாதிக்கப்பட்டால் செய்ய வேண்டியது என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இஸ்ரேல் மீதான ஹமாஸின் தாக்குதல் மற்றும் இஸ்ரேலின் அடுத்தடுத்த பதிலடி நடவடிக்கை குறித்து மேற்கத்திய நாடுகள் ஒரே குரலில் பேசுவதாகத் தெரிகிறது.ஆனால், பொதுவாக பாலஸ்தீனத்திற்கு தங்களது ஆதரவை வெளிப்படையாக தெரிவிக்கும் முஸ்லீம் நாடுகள், இந்த முறை எச்சரிக்கையுடன் நடந்து கொள்கின்றன. இஸ்ரேல்-ஹமாஸ் மோதலில் இந்த நாடுகளின் நிலைப்பாட்டில் முரண்கள் உள்ளன.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் நேற்று (திங்கள்கிழமை) சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், மிசோரம், ராஜஸ்தான், மற்றும் தெலங்கானா ஆகிய ஐந்து மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.ஐந்து மாநிலத் தேர்தலுக்காக காங்கிரஸ் மற்றும் பாஜக சார்பில் முன்னெடுக்கப்பட்டுள்ள யுக்திகள் மற்றும் தற்போதைய சாதிவாரிக் கணக்கெடுப்பு முயற்சிகள் தேர்தலில் ஏற்படுத்த உள்ள தாக்கம் குறித்தும் பிபிசி சார்பில் ...

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ஹைதராபாத்தில் நேற்று நடந்த உலகக் கோப்பைப் போட்டியின் லீக் ஆட்டத்தில் நெதர்லாந்தை வீழ்த்தினாலும், நியூசிலாந்து அணி அடுத்தடுத்துவரும் போட்டிகளில் தடைகளை எப்படிச் சமாளிக்கப் போகிறது என்பதைக் காண கிரிக்கெட் ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இன்றளவும் மலையேற்றப் பயணிகளை பெரிதும் கவர்ந்து வரும் ராஜ்காட் கோட்டையிலிருந்து மன்னர் சிவாஜி தலைநகரை ஏன் மாற்றினார் என்ற கேள்விக்குக் கிடைக்கும் பதில் சுவாரஸ்யம் மிக்கதாக உள்ளது. தற்போது வரை ராஜ்காட் கோட்டை தொடர்ந்து ஒரு அதிசயமாகவே கருதப்படுகிறது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

டெல்லி மாடல் டவுன் பகுதியில் வசிக்கும் அஷ்மீன் கவுரின் மகள் ஜெய்ஷாவுக்கு ஸ்பைனல் மஸ்குலர் அட்ராபி என்ற நோய் உள்ளது. நிபுணர்களின் கூற்றுப்படி, இது ஒரு மரபணு நோய். இதனால் உடலின் தசைகள் படிப்படியாக பலவீனமடைவதால், நோயாளியால் நிற்கக் கூட முடியாது. மருத்துவர்களின் கூற்றுப்படி, இதன் சிகிச்சைக்கு 17.5 கோடி ரூபாய் மதிப்புள்ள ஊசி தேவைப்படுகிறது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இஸ்ரேல் மீதான ஹமாஸ் அமைப்பின் தாக்குதலுக்கு பிரதமர் மோதி கண்டனம் தெரிவித்துள்ளார். இந்நிலையில், பாலத்தீனத்துடனான இந்தியாவின் உறவுகள் குறித்த விஷயங்கள் தற்போது பேசுபொருளாகியுள்ளன.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

பாலத்தீனத்தின் காசா பகுதியை ஒட்டிய இஸ்ரேல் எல்லைப்பகுதியில் நடத்தப்பட்ட இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களை ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடத்திச் சென்றுள்ளனர். அவர்களின் தற்போதைய நிலை என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

காவிரியில் நீர் திறந்துவிட கர்நாடக அரசுக்கு உத்தரவிட மத்திய அரசை வலியுறுத்தி தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தேசிய அளவில் கூட்டணியில் இருப்பதால் காங்கிரசை வற்புறுத்த திமுக தயங்குகிறதா? ஜெயலலிதா இருந்திருந்தால் என்ன செய்திருப்பார்?

Local News

Local News

Sri Lanka News

@2022 - All Right Reserved. Designed and Developed by Rev-Creations, Inc