News Search:
Narrowed By (Click to remove): > [Category] > [time]
- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

உத்தராகண்ட் சுரங்கப்பாதை விபத்தில் உள்ளே சிக்கியுள்ள 41 தொழிலாளர்களையும் மீட்கும் பணி இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. செங்குத்தாக துளையிடும் பணி முடிவடைந்ததும், தொழிலாளர்களை பத்திரமாக மீட்டு வர வசதியாக நீண்ட குழாயும் பதிக்கப்பட்டுவிட்டது. அவர்கள் எந்நேரமும் வெளியே மீட்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

பாகிஸ்தானில் வாக்கி சமூகத்தை சேர்ந்த கடைசி தலைமுறை மேய்ச்சல் பெண்களின் கதை வலி, வேதனை, உறுதி ஆகியவற்றை பறைசாற்றுவதாகும். பல நூற்றாண்டுகளாக வாக்கி சமூகத்து பெண்கள் கோடைக் காலத்தில் ஆடுகளை பாமிர் மலை தொடர் மேலே மேய்ச்சலுக்கு கூட்டிச் செல்கின்றனர். கடல் மட்டத்திலிருந்து 5000 மீட்டர் உயரத்தில் உள்ள அழகிய மலைத் தொடரான பாமிரை சென்றடைவது எளிதானதே அல்ல.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

உத்தராகண்ட் மாநிலம் உத்தர்காசி மாவட்டத்தில் கட்டப்பட்டு வந்த சுரங்கப்பாதையில் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்க ‘எலிவளைச் சுரங்கத் தொழில்நுட்பம்’ பயன்படுத்தப்படுகிறது. என்ன தொழில்நுட்பம் இது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

டிரியன் ஊதா என்ற உயரிய நிறமி பண்டைய காலத்தின் மிகவும் விலையுயர்ந்த பொருளாக இருந்ததது. 301 -ல் பிறப்பிக்கப்பட்ட ரோமானிய ஆணையின் படி அதன் எடையின் மூன்று மடங்கு தங்கத்தை விட அதிகம் மதிப்பு கொண்டதாகும். ஆனால், இன்று வாழும் எவருக்கும் அதை எப்படி செய்வது என்று தெரியாது. பதினைந்தாம் நூற்றாண்டில், இந்த நிறமி எவ்வாறு எதிலிருந்து தயாரிக்கப்பட்டது என்பதற்கான குறிப்புகள் தொலைந்துவிட்டன.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

நடப்பதற்கே அநேகமானோர் சிரமப்படக்கூடிய முதுமையில், இலங்கையின் முல்லைத்தீவு - முள்ளியவளை பிரதேசத்தைச் சேர்ந்த சேர்ந்த 72 வயதான பெண் ஒருவர் சர்வதேச நெடுந்தூர ஓட்டப் பந்தயத்தில் கலந்து கொண்டு, தங்கம் உள்ளிட்ட பதக்கங்களை வென்றுள்ளார்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

தெலங்கானா உருவானதிலிருந்து ஆட்சியில் இருக்கும் பாரத் ராஷ்ட்ர சமிதிக்கு கடும் போட்டியைக் கொடுத்து வருகிறது காங்கிரஸ் கட்சி. கடந்த ஆண்டுவரை பின்னடவைச் சந்தித்துவந்த காங்கிரஸ் இந்த நிலைக்கு வந்தது எப்படி? பா.ஜ.கவின் நிலை என்ன? விரிவான தகவல்களை இந்த கட்டுரை வழங்குகிறது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இந்தியா இரான் ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு முக்கியமான சர்வதேச வடக்கு தெற்கு வர்த்தக பாதை திட்டத்தின் நடவடிக்கைகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதற்கு இஸ்ரேல்-ஹமாஸ் போர் காரணமாக அமைந்துள்ளது. இரான் அல்லாமல் செப்டம்பர் மாதம் டெல்லியில் திட்டமிடப்பட்ட வர்த்தக பாதை தற்போது சாத்தியமாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இது குறித்த விவரங்களை அலசுகிறது இந்த கட்டுரை.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

கும்பகோணம் அருகே காணாமல் போன 2 இளைஞர்களை நாட்டு வைத்தியர் ஒருவர் கொலை செய்திருப்பதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் பிளேடுகள் அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன. இளைஞரின் இதயம், மூளை போன்ற உள்ளுறுப்புகள் காணாமல் போயிருப்பதால் அவை தனியே எடுத்து விற்கப்பட்டிருக்கலாமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

தமிழ்நாட்டில் கட்டணமில்லா பேருந்து சேவையை பயன்படுத்தும் பெண்களிடம் சாதி, மொபைல் எண் கேட்கப்படுவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு அரசு ஏன் அப்படி செய்கிறது? அரசின் நோக்கம் என்ன? அதுகுறித்து எதிர்க்கட்சிகள், பெண்கள் அமைப்புகள் என்ன சொல்கின்றன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு கேப்டனாக 2 சீசன்களில் கலக்கிய ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு திரும்பியிருக்கிறார். மும்பை அணியால் அன்று வெறும் 10 லட்சத்திற்கு வாங்கப்பட்ட அவருக்கு இன்று பெருந்தொகை கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றத்தின் பின்னணியில் நடந்தது என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

மலேசியா செல்ல இந்தியர்களுக்கு விசா தேவையில்லை. மலேசியா உள்பட 19 நாடுகளுக்குச் செல்ல இந்தியர்களுக்கு விசா வேண்டாம். அதுதவிர, இந்தியர்களுக்கு 26 நாடுகள் ஆன் அரைவல் விசா வசதியும், 25 நாடுகள் இ-விசா வசதியும் உள்ளன. அந்த நாடுகள் எவை?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

அமெரிக்க வரலாற்றில் இதுவரை பிடிபடாத ஒரே கடத்தல்காரர் டீன் கூப்பர் மட்டுமே. 10 ஆயிரம் அடி உயரத்தில் பறக்கும் விமானத்தில் இருந்து பணத்துடன், பாராசூட் மூலம் குதித்த அவர் எங்கே போனார்? என்ன ஆனார்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே நடந்துவந்த போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, இருதரப்பும் தாம் சிறைபிடித்த மக்களை விடுதலை செய்து வருகின்றனர். இருதரப்பிலிருந்தும் விடுவிக்கப்பட்டவர்கள் தாம் அனுபவித்த துயரங்களைப் பகிர்ந்துகொண்டனர்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

பாலத்தீன சிறைக்கைதிகள் தங்கள் குடும்பத்தினருடன் மீண்டும் ஒன்று சேர்ந்துள்ளனர்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ஏமனை சேர்ந்த ஹூத்தி கிளர்ச்சிக்குழு சமீபத்தில் செங்கடல் பகுதியில் சென்றுகொண்டிருந்த கப்பல் ஒன்றை கைப்பற்றி மத்தியகிழக்கு நாடுகளில் மீண்டும் ஒரு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேல் - பாலத்தீன மோதலுக்கு இடையே இந்த கிளர்ச்சிக்குழு செயல்படும் விதம் குறித்து அறிந்துகொள்ளும் ஆர்வம் தற்போது உலக அளவில் அதிகரித்து வருகிறது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ஆகஸ்ட் 1990இல் மண்டல் கமிஷன் பரிந்துரையை ஏற்று பிற்படுத்தப்பட்டோருக்கான 27 சதவீத இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படும் என்று வி.பி.சிங் பிரதமராக இருந்த தேசிய முன்னணி அரசு அறிவித்தது. இதை எதிர்த்து நாடு முழுவதும் ஆதிக்க சாதி மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இந்திய நிர்வாகத்திற்கு உட்பட்ட காஷ்மீரில் அமைந்துள்ள அமர்நாத் குகைக்கு செல்லும் பாதையில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவது கடந்த சில நாட்களாக செய்திகளில் வெளியாகி வருகிறது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

30 ஆண்டுகளுக்கும் மேலாகக் கடலில் தரைதட்டி நின்றிருந்த உலகின் மிகப்பெரிய பனிப்பாறை இப்போது நகரத் துவங்கியிருக்கிறது. இதனால் என்ன விளைவுகள் ஏற்படும்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியிலும் இளம் வீரர்களைக் கொண்ட இந்திய அணி அசத்தல் வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகிக்கிறது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய இளம் வீரர்கள் அசத்தலாக பேட்டிங் செய்து ரன்களை குவித்துள்ளனர். இந்தியா நிர்ணயித்துள்ள இமாலய இலக்கை ஆஸ்திரேலிய அணியால் சேஸ் செய்ய முடியுமா?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ரோஜா திரைப்படம் இந்திய சினிமாவில் ஏற்படுத்திய தாக்கம் மிகப்பெரியது. அந்த படத்திற்குப் பிறகு கடந்த 30 ஆண்டுகளில் இந்திய சினிமாவில் முஸ்லிம்களை காட்டும் விதம் எவ்வாறு மாறியுள்ளது? அதற்குக் காரணம் என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

கேரள மாநிலம் கொச்சியில் உள்ள பல்கலைக் கழகம் ஒன்றில் கூட்ட நெரிசலில் சிக்கி 4 பேர் உயிரிழந்தனர். அதற்கு என்ன காரணம்? பல்கலைக் கழக விழாவில் என்ன நடந்தது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

திருவண்ணாமலை தீபத்திருவிழாவில் 63 நாயன்மார் சிலைகளை பள்ளி மாணவர்கள் சுமப்பது சர்ச்சையாகி இருக்கிறது. இந்த வழக்கத்தை யார், எப்போது தொடங்கியது? அது இனியும் நீடிக்கலாமா?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

நீங்கள் குளிக்கும்போது மட்டும் அதிகமாக முடி கொட்டுவது ஏன்? அதற்கான காரணங்கள், தடுப்பது எப்படி? ஹேர் டிரையர் பயன்படுத்தலாமா? முடி உதிர்வதை எப்போது பிரச்னையாக கருதி மருத்துவரை பார்க்க வேண்டும்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், போர் நிறுத்தம் முடிவுக்கு வந்தால் என்ன நடக்குமோ என்ற அச்சம் அதிகரித்து வருகிறது. சர்வதேச அழுத்தங்களை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எளிதில் கடந்து செல்வார் என்றும் நிபுணர்கள் கருதுகின்றனர்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இந்தியா உட்பட பல நாடுகளில், ஒரே வீட்டில் பல தலைமுறைகள் வாழ்வது பொதுவானது. ஆனால், சில நாடுகளில் குழந்தைகள் பொருளாதார ரீதியாக சுதந்திரமாக இருக்கும்போது பெற்றோரிடமிருந்து பிரிந்து வாழ வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏன்?அவ்வாறு செய்ய முடியாதவர்கள், அந்தந்த நாட்டில் சமூக அழுத்தங்களையும் அவதூறுகளையும் சந்திக்க வேண்டியுள்ளது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு இந்திய நிலப்பரப்பை தத்ரூபமாக வரைந்து கொடுத்தவர் ஓவியர் சீதா ராம். ஆனால், இவரைப் பற்றி வரலாற்றில் அதிகமாகத் தெரிய வராமல் போனது ஏன்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

நெகிழி மாசுபாடு அதிகரிப்பதால் அதற்கு மாற்றாகப் பயன்படுத்தப்படும் காகித ஸ்டிராக்களிலும் ஆபத்துகள் புதைந்திருப்பதாக புதிய ஆய்வு ஒன்று கூறுகிறது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

உண்மையில் `சேரி` என்ற வார்த்தையின் ஆதி என்ன? அதுவொரு இழிசொல்லா? நற்சொல் என்றால், ஏன் அதுவொரு இழிசொல்லாகப் பல இடங்களில் பயன்படுத்தப்படுகின்றது? வரலாற்று ரீதியில் அந்த வார்த்தையை எதற்காகப் பயன்படுத்தினர்? விரிவாக அலசுகிறது இந்தக் கட்டுரை.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

சீனாவில் மசூதிகள் இடிக்கப்படுவதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் குற்றம்சாட்டியுள்ளது. முஸ்லிம் மத அடையாளங்களை கட்டுப்படுத்த அறிவுறுத்தும் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆவணம் என்ன சொல்கிறது?

Local News

Local News

Sri Lanka News

@2022 - All Right Reserved. Designed and Developed by Rev-Creations, Inc