News Search:
Narrowed By (Click to remove): > [Category] > [time]
- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

அமெரிக்கா, பிரிட்டன் போன்ற வளர்ந்த நாடுகளில் பயிலும் சீன மாணவர்களை குறிவைத்து புதுவிதமான மோசடி அரங்கேற்றப்படுகிறது. அதாவது ஆளை கடத்தாமலேயே கடத்திவிட்டதாக பெற்றோரை நம்ப வைத்து ஒரு கும்பல் பணம் பறிக்கிறது. அது எப்படி நடக்கிறது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இந்தியாவில் பசுமைப் புரட்சிக்கும், உலகம் முழுவதும் பல தலைமுறைகளாக கோடிக்கணக்கானோர் பசி போக்கவும் காரணமானவர் இந்த விஞ்ஞானி. அத்தகைய பெருமைக்குரியவரை 'கொலைகார விஞ்ஞானி' என்று அழைப்பது ஏன்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

அரபிக்கடலில் கடற்கொள்ளையரை இந்திய கடற்படை விரட்டியடித்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளது. இதன் மூலம் இந்திய பெருங்கடலில் சீனா பக்கம் சாயும் நாடுகளுக்கு இந்தியா சொல்ல வரும் சேதி என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் பகலில் கொத்தனார், இரவில் திருட்டு என்று செயல்பட்டு வந்த கும்பலை அதே பாணியில் போலீசார் பிடித்துள்ளனர். காய்கறி மற்றும் பலூன் வியாபாரிகள் போல் வேடமிட்டு போலீசார் அவர்களை பிடித்தது எப்படி? இந்த வழக்கில் துப்பு துலங்கியது எப்படி?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

பல நாட்களாக இருக்கும் மன அழுத்தம், மரபியல், நமது உடல் ஹார்மோனில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் அல்லது சில மருந்துகளை உட்கொள்வதால் ஏற்படும் பக்கவிளைவுகள் போன்ற பல்வேறு காரணிகளால் முடி உதிர்தல் ஏற்படலாம்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இந்தியாவில் 167 ஆண்டுகளுக்கு முன்பே 14 வயதில் ஒரு தலித் சிறுமி எழுத்தாளராக விளங்கினார் என்பது ஆச்சரியமளிக்கும் செய்தி. பிராமண ஆதிக்கத்தை எதிர்த்த அவர் 'நாம் மதமற்றவர்கள்' என்று முழங்கியது ஏன்? பெண்கள், பிராமணர் அல்லாதோருக்கு கல்வி மறுக்கப்பட்ட அந்த காலத்தில் அவர் படித்தது எப்படி? இந்திய சமூகம், ஆங்கிலேயர் பற்றிய அவரது பார்வை என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

எண்ணூரில் எண்ணெய்க் கழிவு மற்றும் வாயுக் கசிவால் அடுத்தடுத்த விபத்துகள் ஏற்பட்டு அந்தப் பகுதி மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தப் பாதிப்புகளின் நீட்சி தங்கள் அன்றாட வாழ்க்கையைத் தொடர்ந்து பாதிப்பதாக எண்ணூர் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். அவர்களின் தற்போதைய கள நிலவரம் என்ன? அடுத்த நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு அரசு என்ன சொல்கிறது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

அனைவரும் விரும்பிச் சாப்பிடும் பாப்கார்ன் செய்ய மக்காச்சோளம் தேவை. ஆனால், அதை அழிக்கவல்ல புழுக்கள் தமிழ்நாட்டில் படையெடுத்துள்ளன. அவற்றைத் தடுப்பது எப்படி? என்ன செய்ய வேண்டும்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் தலைமையில் தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம், தென்னிந்திய நடிகர்கள் சங்கம், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை, தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் உட்பட 12 திரைப்பட அமைப்புகள் இணைந்து 'கலைஞர் 100' என்ற முன்னாள் முதல்வர் மு. கருணாநிதிக்கு நூற்றாண்டு விழாவை சென்னை கிண்டி ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நடத்து முடித்துள்ளனர். அதில் என்ன நடந்தது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இந்தியாவில் மாநில அணிகளுக்குப் பதிலாக முன்னர் மதங்களின் அடிப்படையில் கிரிக்கெட் அணிகள் இருந்தன. அவற்றால் ஏற்பட்ட வகுப்புவாத பிரச்னைகள், கலவரங்கள் என்ன? அதை மகாத்மா காந்தி தடுத்தது எப்படி?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன் பற்றிய 5 மர்மங்கள் இன்னும் விலகாமல் இருக்கின்றன. அவரது பிறந்த நாள், தாய், மனைவி, குழந்தைகள் என அனைத்திலுமே ரகசியம் காக்கப்படுவது ஏன்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

மத்தியில் இருக்கும் பா.ஜ.க அரசு, அமலாக்கத்துறை, சி.பி.ஐ போன்ற மத்தியப் புலனாய்வு நிறிவனங்களை தொடர்ந்து எதிர்கட்சித் தலைவர்களுக்க்கு எதிராகப் பயன்படுத்தி வருவதாக குற்றச் சாட்டுகள் வைக்கப்படுகின்றன. பா.ஜ.க.வில் இணைந்த எதிர்க்கட்சித் தலைவர்கள் மீதான அமலாக்கத்துறை வழக்குகள் என்ன ஆயின?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

அமெரிக்காவில் 16,000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்த விமானத்தின் ஜன்னல் உள்பட ஒரு பகுதி உடைந்து காற்றில் பறந்தது. அதில் இருந்த பயணிகள் என்ன ஆனார்கள்? அந்த விமானத்தை தயாரித்த போயிங் நிறுவனம் கூறுவது என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

மாலத்தீவு அதிபர் முய்சு இந்தியாவை விட்டு சீனாவுக்குச் செல்ல தீர்மானித்துள்ளார். சீனாவில் அவரது திட்டம் என்ன? சீனா - மாலத்தீவு அடுத்தக்கட்ட நகர்வுகள் என்ன? அதனால் இந்தியாவுக்கு என்ன பிரச்னை?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

சூரியனை ஆய்வு செய்ய இஸ்ரோ அனுப்பியுள்ள ஆதித்யா எல்1 விண்கலம் எல்1 புள்ளியை இன்று அடையும். அங்கிருந்தபடியே, ஆதித்யா எல்1 என்ன செய்யப் போகிறது? அதில் உள்ள 7 கருவிகளும் எவ்வாறு செயல்படும்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இலங்கையில் முதல் முறையாக தேசிய அளவில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெறுகின்றன. சோழர் காலத்தில் பிரமாண்டமாக நடைபெற்ற ஏறு தழுவுதல் பின்பு தெருவோரங்களில் மட்டுமே நடைபெற்று வந்தது. தற்போது மீண்டும் தமிழக வீரர்கள் உதவியுடன் இந்நிகழ்வு முதல் முறையாக நடக்கிறது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

கடந்த 1992ஆம் ஆண்டு, 'ரோஜா' திரைப்படம் மூலம் அறிமுகமான இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இன்று 56ஆவது பிறந்த நாள். ரஹ்மானில் வாழ்வில் அவர் சந்தித்த சவால்கள் என்ன? அவரது வாழ்க்கை பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

மதுரை மேலவளவில் கிராம ஊராட்சியின் பொறுப்புகளுக்குத் தேர்வாகியிருந்த முருகேசன், அரவது தம்பி ராஜா உட்பட ஏழு பேர், 1997ஆம் ஆண்டு ஜூலை 30ஆம் தேதி, கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். இந்தியாவையே உலுக்கிய இந்தப் படுகொலை எப்படி நடந்தது? குற்றவாளிகள் என்ன ஆனார்கள்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

அமலாக்கத்துறை சார்பில் சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே விவசாயிக்கு சாதிப் பெயரை குறிப்பிட்டு சம்மன் அனுப்பிய விவகாரம் தமிழ்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுளது. விவசாயிகள் மீது பண மோசடி வழக்கு போடப்பட்டது ஏன்? இதுகுறித்து அமலாக்கத்துறை கூறுவது என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

பிரிட்டன் கிழக்கிந்திய கம்பெனியின் அடிமைத்தனத்தில் இருந்து அமெரிக்கா மீண்டு வர தேநீர் உதவியது என்றால் நம்புவீர்களா? ஆனால், அதுதான் உண்மை. பாஸ்டன் தேநீர் விருந்து என அழைக்கப்படும் அந்தச் சம்பவத்தின் பின்னணி என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

நிதிப் பகிர்வில் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, மத்திய அரசுக்கு அளிக்கப்படும் வரியைவிடக் குறைவாகவே திரும்பக் கிடைப்பதாக குரல்கள் எழுந்து வரும் நிலையில், நிதி குறித்த நிர்மலா சீதாராமனின் புதிய பேச்சு சமூக ஊடகங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

சோமாலிய கடற்பகுதியில் ஜனவரி 4ஆம் தேதி மாலை லைபீரிய சரக்குக் கப்பல் ஆயுதம் ஏந்திய குழுவால் கடத்தப்பட்டது. அதையடுத்து துரிதமாகச் செயல்பட்ட இந்திய கடற்படை அந்தக் கப்பலுக்கு உதவ ஐ.என்.எஸ் சென்னை என்ற போர்க்கப்பலை அனுப்பியுள்ளது. அது இப்போது கடத்தப்பட்ட கப்பலை நெருங்கிவிட்டது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

அயோத்தியில் ராமர் கோவில் குடமுழுக்கு ஜனவரி 22ஆம் தேதி நடைபெறவுள்ளது. கிட்டத்தட்ட 7000 விருந்தினர்களுக்கும், 3000 சிறப்பு விருந்தினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில் காங்கிரஸ் கட்சி பங்கேற்குமா? அதன்மூலம் அவர்களுக்கு பலன் கிடைக்குமா? அல்லது பாதிப்பாக அமையுமா?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

கத்தாரில் 8 முன்னாள் இந்திய கடற்படை அதிகாரிகளுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ரத்து செய்யப்பட்டது எப்படி? அவர்களுக்கான புதிய தண்டனை விவரங்கள் என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ஒரு கோடி ரூபாய் காப்பீட்டுத் தொகையைப் பெறுவதற்காக தன்னைப் போல் இருந்த நண்பரைக் கொலை செய்த ஜிம் மாஸ்டார் எப்படி சிக்கினார்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

துருக்கியில் தஞ்சம் அடைந்துள்ள சிரிய அகதிகள் வலுக்கட்டாயமாக நாடு கடத்தப்படுவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். துருக்கி அரசு இப்படிச் செய்வது ஏன்? அங்கு என்ன நடக்கிறது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இந்த பச்சை நிற ஹனி க்ரீப்பர் பறவையினம் (க்ளோரோஃபேன்ஸ் ஸ்பைஸா) பரவலாக காணப்படும் ஒன்றுதான். ஆனால், ஜான் முரில்லோ கண்ட பறவை நிச்சயமாக குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

பத்திரிகையாளரும் சமூக ஆர்வலருமான மக்பூல் அகமது, இந்தியா-பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் பத்துக்கும் மேற்பட்ட ஜோடிகள் திருமணம் செய்துகொள்வதற்கு விசா கிடைக்க உதவியுள்ளார்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

கிரிக்கெட்டிலிருந்து பிரித்துப் பார்க்க முடியாத, கிரிக்கெட்டை முழுமையாக நேசித்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர், டெஸ்ட், ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறார்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 9-ஆம் தேதி முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து ஊழியர் சங்கங்கள் தெரிவித்துள்ளன. தமிழ்நாடு அரசு என்ன செய்யப் போகிறது?

Local News

Local News

Sri Lanka News

@2022 - All Right Reserved. Designed and Developed by Rev-Creations, Inc