News Search:
Narrowed By (Click to remove): > [Category] > [time]
- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

குஜராத் மாநிலம் வடோதராவில் ஏரி ஒன்றில் படகு சவாரி செய்த 12 குழந்தைகள், 2 ஆசிரியர்கள் பலியாகியுள்ளனர். படகில் அனுமதிக்கப்பட்ட நபர்களைவிட அதிகமான பேர் சவாரி செய்துள்ளனர். இதனால் நிலை தடுமாறிய படகு கவிழ்ந்து விபத்து நேர்ந்துள்ளது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

பாஜக நடத்தும் ராமர் கோவில் திறப்பு விழாவை புறக்கணிக்கும் கட்சிகள் இந்துக்களின் வாக்குகளை பெற என்ன செய்கின்றனர்? தாங்கள் இந்து ஆதரவாளர்களே என நிரூபிக்க எதிர்க்கட்சிகள் போராடுவது பாஜகவின் அரசியலுக்கு கிடைத்த வெற்றியா?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ஆண்டெஸ் மலைத்தொடரில் ஏற்பட்ட ஒரு விமான விபத்தால் மலைப்பகுதியில் சிக்கிய பயணிகள், இறந்துபோன சக பயணிகளின் பிணங்களைத் தின்று உயிர் பிழைக்க வேண்டியிருந்தது. அது ஏன்? விபத்தில் என்ன நடந்தது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இரானில் பாகிஸ்தான் குறிவைத்து தாக்கியுள்ள பலுசிஸ்தான் விடுதலை இராணுவம் என்பது என்ன? அதன் வரலாறு என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

சர்க்கரை அதிக அளவில் சாப்பிட்டால் உடல் பருமன் போன்ற உபாதைகள் ஏற்படும் என்ற நிலையில் ஒரு நபர் ஒரு நாளைக்கு எவ்வளவு சர்க்கரையை உட்கொள்ளலாம் என்பது மிக முக்கிய பரிந்துரையாக இருக்கிறது. அதைப் பற்றிய தகவல்களை அலசுவது தான் இந்தத் தொகுப்பின் நோக்கம்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

சிங்கப்பூர் நாடாளுமன்றத்தின் தமிழ் வம்சாவளி அமைச்சரான சுப்பிரமணியம் ஈஸ்வரன் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் மிக அரிதான, அசாதாரணமான இந்த வழக்கு அந்த நாட்டை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. இந்த வழக்கின் பின்னணி என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

பிகாரில் பார்க்கிங் பிரச்சனையால் மூன்று இளைஞர்கள் மற்றும் ஒரு முதியவர் கொல்லப்பட்டிருக்கின்றனர். சிறிய பிரச்னை எப்படி கொலை செய்யும் அளவுக்கு எப்படி பெரிதானது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

பாகிஸ்தான் மீது அத்துமீறி இரான் தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், இருநாடுகளின் உறவுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதே நிலை நீடித்தால் ஒரு மோசமான போரை பொதுமக்கள் எதிர்கொள்ளும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இந்தியா-ஆப்கானிஸ்தான் இடையே நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் 'டபுள் சூப்பர் ஓவர்' தேவை என்ற நிலை ஏற்பட்டபோது, ஆட்டம் மிகவும் பரபரப்பானது. அப்போது 'அஸ்வின் லெவல் ஐடியா' மூலம் ரோஹித் சர்மா இந்திய அணியை வெற்றி பெற வைத்தது எப்படி?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

'மகாராணி சீதா தேவி பாரிஸில் வசித்து வந்தபோது, தன் விசுவாசிகள் சிலரிடம் இக்கதையைச் சொன்னார். இவ்வளவு துணிச்சலுடனும் தன்னம்பிக்கையுடனும் இதை எப்படிச் செய்ய முடியும் என்று சிலரால் நம்ப முடியவில்லை. ஆனால் இது புலிகளைக்கூட வேட்டையாடத் தெரிந்த மகாராணி சீதா தேவியாம்.”

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

பாகிஸ்தான் மீது இரான் தாக்குதல் நடத்தி 2 நாட்கள் கழித்து, இரான் எல்லைக்குள் பாகிஸ்தான் பதில் தாக்குதல் நடத்தியுள்ளது. இரானில் பதுங்குமிடங்களில் மறைந்துள்ள "தீவிரவாத குழுக்களை" குறிவைத்து இந்தத் தாக்குதலை நடத்தியதாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை கூறியுள்ளது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ஒடிசாவில் வாழும் பழங்குடி மக்களின் பிரதான உணவான சிவப்பு எறும்பு சட்னிக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. அதன் சிறப்புகள் என்ன? எப்படி சமைப்பது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

சிராவயல் மஞ்சுவிரட்டில் ஏற்பட்ட விபத்து, மஞ்சுவிரட்டின் வரலாறு மற்றும் எதிர்காலம், மஞ்சுவிரட்டுக்கும் ஜல்லிக்கட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. அதேநேரம், உரிய விதிகளை வகுத்து முறைப்படி நடத்தினாலும், அதை சிலர் மீறுவதே இத்தகைய மரணங்கள் நிகழக் காரணம் என்று ஆட்சியர் குற்றம் சாட்டுகிறார்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

பாலத்தீன போராளிக் குழுவான ஹமாஸ் இஸ்ரேலால் உருவாக்கப்பட்டது என்ற கருத்து பல தசாப்தங்களாகவே முன்வைக்கப்பட்டு வருகிறது. எகிப்து அதிபர் முதல் அமெரிக்க செனட்டர் வரை பல தலைவர்களும் அந்த கருத்தை முன்வைத்துள்ளனர். அது உண்மையா?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

அயலான் திரைப்படம் ஒரு VFX கதாபாத்திரத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட தமிழ்படம். அந்த படத்தில் வரும் ஏலியன் கதாபாத்திரம் 1,500 பேரின் உழைப்பில் தத்ரூபமாக உருவானது எப்படி?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

அயோத்தி ராமர் கோவிலில் ராமர் சிலையை இந்திய பிரதமர் நரேந்திர மோதி பிரதிஷ்டை செய்வதை எதிர்ப்பது ஏன்? என்று பிபிசிக்கு ஜோதிர்மடத்தின் சங்கராச்சாரியார் அவிமுக்தேஸ்வரானந்த் சரஸ்வதி மகராஜ் பேட்டி அளித்துள்ளார். ராமர் கோவில் குடமுழுக்கை இப்போது செய்வதையும், ராமர் சிலையை மோதி பிரதிஷ்டை செய்ய இருப்பதையும் எதிர்ப்பது ஏன்? என்று அவர் விரிவாக பதில் அளித்துள்ளார்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இரண்டாம் உலகப் போர் சமயத்தில் ஹிட்லரிடம் இருந்து நிகோலஸ் வின்டன் என்பவர் 700 யூத குழந்தைகளை காப்பாற்றியுள்ளார். புகழ் பெற்ற ஆஸ்கர் ஷிண்ட்லரைப் போல யூதர்களைக் காப்பாற்ற இவர் என்ன செய்தார்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

தென் அமெரிக்காவில் அர்ஜெண்டினாவுடன் இந்தியா புதிய ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது. முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும் இந்த ஒப்பந்தம், தென் அமெரிக்க கண்டத்தில் ஏற்கனவே இதுபோன்றதொரு இந்த துறையில் காலூன்றியுள்ள சீனாவுக்கு இந்தியா போட்டியாக வருகிறதா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

சர்வதேச அரசியல், காஸா மீதான இஸ்ரேலிய தாக்குதலில் இந்தியாவின் நிலைப்பாடு போன்ற முக்கிய அம்சங்கள் குறித்த விவாதங்கள் அதிகரித்த ஒரு வேளையில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இரானுக்குப் பயணம் மேற்கொண்டது ஒரு பேசுபொருளாகியுள்ளது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

திருவள்ளுவர் உண்மையில் காவி உடை அணிந்த சனாதன துறவியா? இதுகுறித்து தமிழ் அறிஞர்களும், ஆன்மீகவாதிகளும் கூறுவது என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

மதுரையில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடைபெற்று வருகிறது. நீதிமன்ற விதிகளுக்கு உட்பட்டு, தமிழக அரசின் ஏற்பாட்டில், அவனியாபுரம், பாலமேட்டை தொடர்ந்து, அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடைபெற்று வருகிறது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

பாலமேடு ஜல்லிக்கட்டுப் போட்டியில் 14 காளைகளை அடக்கிய பிரபாகரனுக்கு முதல் பரிசு வழங்கப்பட்டது. அவர் ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்தும் முறை குறித்து ஒரு கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

செவ்வாய்க்கிழமை அன்று, அண்டை நாடான இரான் நடத்திய தாக்குதலில் இரண்டு குழந்தைகள் கொல்லப்பட்டதாகவும் மேலும் மூன்று பேர் காயமடைந்ததாகவும் பாகிஸ்தான் கூறுகிறது. என்ன நடக்கிறது? இரான் கூறுவது என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ராமர் கோவில் அயோத்தியில் திறக்கப்படவுள்ள நிலையில், நாடு முழுவதும் அதன் பலன்களை அரசியல் ரீதியாக அறுவடை செய்ய பாஜக முயல்கிறது. இந்த முயற்சி தமிழ்நாட்டின் தேர்தல் களத்தில் பாஜகவுக்கு பலனளிக்குமா? தமிழக பக்தர்கள் நினைப்பது என்ன? ராமர் அரசியல் குறித்து வரலாறு என்ன சொல்கிறது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

மாட்டுப் பொங்கல் தினத்தன்று மதுரை பாலமேட்டில் 1000 காளைகள், 700 வீரர்கள் பங்கேற்கும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

சாதி ஆணவக்கொலைகளுக்கு தனிச்சட்டம் இயற்றினால் போதுமா? சாதி ஆணவக்கொலைகள் உண்மையில் அதிகரித்துள்ளதா? சாதி ஆணவக்கொலைகளைத் தடுக்க என்ன வழி?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

செயற்கை நுண்ணறிவு கிட்டத்தட்ட 40% பணிகளை பாதிக்கக்கூடும் என்று சர்வதேச நாணய நிதியத்தின் புதிய ஆய்வு கூறுகிறது. யாரெல்லாம் அதிகம் பாதிக்கப்படுவார்கள்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

எல்லையில் பாதுகாப்பு பணியில் இருந்த இளம் பெண்களிடம் பிபிசி பேசியது. அந்தப் பெண்கள், அவர்கள் சந்தேகத்திற்கிமான செயல்களை கவனித்தது, அது தொடர்பாக அவர்கள் தாக்கல் செய்ய அறிக்கை, அதற்கு இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் எந்த பதிலும் சொல்லாமல் இருந்தது உள்ளிட்டவை குறித்து பிபிசியிடம் பகிர்ந்துகொண்டனர்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

அறிவியலில் மனிதன் என்னதான் வளர்ந்திருந்தாலும், இன்னும் தீர்க்கப்படாத ஏராளமான கேள்விகள் அறிவியலின் முன் நிற்கின்றன. அவ்வாறு அறிவியலால் பதிலளிக்க முடியாத 5 கேள்விகள் இங்கே தரப்பட்டுள்ளன.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இந்திய எல்லைக்கு அருகே மியான்மர் நகரை கைப்பற்றியதாக அரக்கன் ஆர்மி கிளர்ச்சியாளர்கள் அறிவித்துள்ள நிலையில், இந்தியாவுக்குள் அகதிகளின் வருகை எதிர்ப்பு, எல்லைப் பகுதியில் பாதுகாப்புக் குறைபாடு போன்ற பிரச்னைகள் அதிகரிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Local News

Local News

Sri Lanka News

@2022 - All Right Reserved. Designed and Developed by Rev-Creations, Inc